Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Friday, January 14, 2011

என்னைபோலவே இருக்கீங்களே?_ மைனா தம்பி ராமையா_ You are look like me!


in Picture : Sugumarje, Mynaa Director Prabu Salomon, thambiramaiah, kavignar Yugabharathi and Vitharth


மைனா திரைப்பட குழுவினரின் பாராட்டுவிழாவில் சுகுமார்ஜியான நானும் கலந்து கொண்டேன்... சென்ற டிசம்பர் மாதம் 27 ம் நாள் திருச்சியில் விழா நடைபெற்றது... எனக்கு இந்த வாய்ப்பை பெற்றுத்தந்தவர் திரை உதவி இயக்குனர், குறும்பட இயக்குனர் நண்பர் கிருஷ்ணா.

பாராட்டு விழா அமைத்த “அன்பாலயம்” மாற்றுத்திறனுக்கானவர்களின் மையத்தின் இயக்குனர் திரு. செந்தில்குமார் அவர்களுக்காக மைனா திரைப்பட குழுவினருக்கான விருது வடிவம்... அதோடு வரவேற்புக்கான ஒலி, ஒளி காட்சியும் நான் தயாரித்தேன்.

விழா அரங்க வளாகத்தில் முதலில் மைனா இயக்குனர், பிரபு சாலமனை சந்தித்தேன்... முட்டாள்தனமாக “என்னை ஞாபகம் இருக்குங்களா?” எனறு கேட்டேன்....

திரு, பிரபு சாலமன் என கல்லூரி நண்பரின் நண்பர்... நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன் தானே :) லீ திரைப்பட வெளியீடு அன்று இரவு சென்னையில் திரு பிரபு சாலமன், இமான் மற்றும் அவரின் நண்பர்களோடு விருந்துண்ணல் நிகழ்ந்தது... அந்த நாட்களில் நாங்கள் சென்னையில் இருந்ததும் ஒரு காரணம்.

பாராட்டு விழா நிகழ்வில் அடுத்ததாக நான் கண்டது திரு. தம்பி ராமையாவை... சும்மா(?!) கிட்ட நின்றிருந்தேன்... சட்டென் திரும்பி என்னைப்பார்த்து... “என்ன சார்? என்ன மாதிரியே இருக்கீங்க...? என்றார்... நான் புன்னகைத்தேன்...

அந்த நேரத்தில் நான் “மைனா” பார்க்கவில்லை...

பார்த்திருந்தால் இப்படி கேட்டிருப்பேன்...

“ராமையா சார்... ஒரு சந்தேகம் கேட்கலாமா?”

“தாராளமா கேளுங்க”

“இப்ப எனக்கு வீட்டுக்கு போக வழி மறந்திடுச்சு... கொஞ்சம் சொல்லுங்களேன்”

:)

ராமையா பேசும் பொழுது... நகைச்சுவை தனக்கு சுலபமானது என்பதை வெளிப்படுத்தினார்.

“வாழ்க்கை என்பது பட்டாம்பூச்சி... லேசா பிடிச்சா பறந்துரும், அழுத்திபிடிச்சா செத்துரும்” :)

அப்புறம் மைனா நாயகன் விதார்த்... அன்று நாயகனின் பிறந்தநாள் கூட... நிகழ்வில் அவரே சொன்னார்... யுகபாரதி... கவிஞரை  பார்த்ததும் பேசவில்லை... என்ன பேசுவது என்று யோசிப்பதிற்குள் மதிய விருந்துக்கு தயாராகிவிட்டோம்...

விழா அருமையாக நிகழ்ந்தது... மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் தான் கலை நிகழ்ச்சியில் பங்குகொண்டனர்... விழாவில் ஒரு மாணவன்... மிக அருமையாக இந்த ஸ்டைல் தான் என்றில்லாமல் நடனமாடினான்... ஆகா :) என்ன கைதட்டல்... அதற்காகவே சிறப்பு பரிசை அள்ளினான்... மற்றொரு மாணவன் “குறையொன்றுமில்லை” என்ற பாடலை பாடினான்... அப்படி பாடுகின்றவனையெல்லாம் நாம் மாற்றுத்திறனாளி என்று அழைத்தால், நாம் தான் மனநலம்குன்றியோராவோம்.  அந்த பாடலை பாடி முடித்ததும், அவன் முகத்தில் எழுந்த அந்த மகிழ்ச்சி பிரவாகம்... யாராலும் அதை பெறவும் முடியாது... பெற்றுத்தரவும் முடியாது...

விழாவின் நிறைவில் நாங்கள் ஒளிப்படமாக பதிந்து போனோம்... நினைவிலும் கூட...

ம். ம்.. சரி மைனா திரைப்படம் பற்றி...

நான் வகுப்பில்தான் திரைப்படம் பற்றிய விமர்சனங்களை பாடங்களாக நடத்துவேன்... பதிவில் அல்ல :)


Post Comment

No comments: