எதிரெதிரே நாம்; வாகனத்தில்...
சடாரென பெய்யத்துவங்கிய மழையில்...
நீர்த்திவலைகளோடு
உன் முகம் மட்டுமே
பூத்திருந்தது!
என் சொந்த கவிதைங்க! நிஜமாலுமேதான். (என்னப்பா திடீர் கவிதை? ஆமாங்க... 4 வரிக்கு 42 குத்து குத்துறாங்கள்ள அதை டெஸ்ட் பண்ணத்தான்)
காதலியிடம் ஐ லவ் யூ சொல்லிவிடுங்கள். ஆமா, நல்ல விசயங்களை மனசுல வச்சிட்டே இருக்ககூடாது... உண்மையாக இருக்கும் நிலையில் அவளோ, அவனோ எதிர்பார்க்கலாம் இல்லையா? அதுனால சொல்லிவிடுங்கள்.
அப்பப்ப தோன்ற நல்ல விசயங்களை சொல்லிடனும். இப்பல்லாம் நிறைய பேரு புழுங்கிப்போறாங்க.. காதல்ல மட்டுமல்ல. எல்லாத்திலேயும் தான்... எதிரெதிரா கைகுலுக்கி பேசுறவங்க கூட மறைச்சு, மறைச்சு பேசுறாங்க... பட்டுன்னு சொல்ல யோசிக்கிறாங்க...
நான் சொல்ல வர்ரது ஒருத்தர ஒருத்தர் காயப்படுத்துறதுக்கு இல்லங்க...அதைச்செய்ய எல்லோரும் தயார்... உன்ன எனக்கு பிடிக்கலை...நீ செய்யறது ஓவரு... முட்டாள் மாதிரி நடந்துக்காதே...நீ சொன்ன நான் கேட்டகனுமா... நீ என்ன ஒழுங்கா... ரீதியிலான பேச்சுக்களும், கேள்விகளும் சுத்த அபத்தம்.
நன்றாக ஒன்றை ஞாபகத்தில் இருத்திக்கொள்ள வேண்டும். உங்களின் அதே அளவுக்கு, 1) எதிர்பார்ப்பு 2) ஆவல் 3) குணம் 4) கோபம் 5) ஆசை 6) ஆர்ப்பாட்டம் 7) அடாவடி இன்னமும் என்னவெல்லாம் இருக்கிறதோ... அதெல்லாம் எதிராளியிடமும் இருக்கும்... அவள், அவன் நீங்கள் பெற்றெடுத்தாலும், வளர்த்தாலும் சரி... யாராக இருந்தாலும் சமம், சமம்தான்....
நீங்கள் மனிதனென்றபோது அடுத்தவரும் அப்படித்தானே... உங்க கிட்ட ஸ்பார்க் இருக்குன்னா... அடுத்தவங்க கிட்டயும் அதானே இருக்கும். நீங்க கூலா இருந்தா அடுத்தவரும் கூலாக இருப்பார்... கண்டிப்பான உண்மை...
இந்த எழுத்து வடிக்கும் பொழுது எனக்கு இருக்கக்கூடிய அதே மன நிலை, படிக்கிற உங்களுக்கும் வருவது நிச்சயம். உங்களை எனக்கு முன்பின் தெரியாது... ஆனால் உங்களை உணர இயலும்... நீங்களும் என்னை உணர முடியும்.
ஆமாங்க... ஒவ்வொருவரும் ஸ்தூலமாக (கண்ணுக்குப்புலப்படாத இயற்கை சக்தி) இணையம் போல இணைந்துதான் இருக்கிறோம்.
பரீட்சைக்கு தயாரா?
வார்த்தைகளால் அடுத்தவர் மனதை நிரப்புங்கள். பதில் அவர்களிடமிருந்து கிடைக்கும்...
.
No comments:
Post a Comment