Attention: Now www.sugumarje.com running as sugumarje.blogspot.com - Sorry for this inconvenience

Recent Caricatures

Thursday, December 24, 2009

கண்கள் இரண்டால் கட்டி இழுத்தாய்

ஒரு மனிதன் பார்ப்பதை மற்றொரு மனிதன் அனுமானிக்க முடியுமே அன்றி உணர்ந்து கொள்ள இயலாது. விமானம் வானில் பறந்து செல்லும் போது நான் அதைப்பார்க்க முற்படுவேன்... சிறு வயதில்.. தெரிகிறதா? இல்லை பார்க்கிறாயா? என்று கேட்கப்படும்...ஆக நாம் சொல்லும் பதிலைப்பொருத்தே அந்த அனுபவம் கிடைக்கப்படும்.

இருகோண நிழற்படங்கள் பரிசோதனை வகை. 65 மி.மி இடைவெளி முப்பரிமாணத்திற்காக... இந்த வகை நிழற்படங்களில் ஒன்று மற்றொரு காமிரா கோணத்தைவிட சற்று இடமோ, வலமோ நகர்ந்திருக்கும்... கடந்த பதிவு அப்படியான ஒன்று...

அடுத்து...

நமது இரு கண்களுக்கிடையே இருக்கக்கூடிய 65 மி.மி இடைவெளி ஏற்படுத்தும் பாதிப்புகள் மனிதனுக்கு மட்டுமே என்று அறுதியிட்டுச்சொல்ல முடிவதில்லை.

கொஞ்சம் முன்னேபின்னே இடைவெளியிருந்தாலும், யானை தன் தும்பிக்கையால் ஒரு சிறு துரும்பை எடுக்க இயலுகிறது. உராங் உடானோ, குரங்குகளோ கிளை பார்த்து மரத்திற்கு மரம் தாவமுடிகிறது. சிங்கம், புலி வகையறாக்கள் பதுங்கிப்பாய்ந்து இரை பிடிக்க முடிகிறது. தவளையால் இங்கிருந்து கொண்டே அங்கே அமர்ந்திருக்கும் பூச்சியை லபக்க முடிகிறது.

பக்கவாட்டு கண்கள் கொண்ட சில விலங்குகளுக்கும், பறவைகளுக்கும்... அவைகளுடைய கண்களில் இந்த சிறப்புத்தன்மை இருக்கிறது. அது பரிமாண பார்வை. எல்லா இருகண் பார்வைகளும் கிடைக்கும் பிம்பத்தை அலசி அதன் நீளம், அகலம், உயரம் கணிக்கும் மூளை, அருகே, தூர கணக்கிட்டும் கொள்கிறது.

வவ்வால் இதனிலிருந்து முற்றிலும் மாறுபட்டது... அதற்கு இந்த வகையான முப்பரிமானத்திக்கு மிஒலி தேவையை உபயோகப்படுதிக்கொள்கிறது.

பொதுவாக அந்த கணிதம் செயற்படாதிருக்கும் போது...

புதிதாக கண்கண்ணாடியணிந்தவர்கள் தரையில் நடக்கும் போது மூன் வாக் செய்வதை காணலாம்... பல மாடி கட்டிடங்களில் லிப்ட் செயற்படா காலத்தில், மேலே செல்ல ஒரே மாதிரியான படிக்கட்டுகளில் ஏறும் போது கால்கள் தடுமாறுவதை அறிந்திருக்கிறீர்களா?

நீங்கள், ஊட்டி, கொடைக்கானல் மலையிலிருக்கும் போது... நல்ல தரமான பைனாகுலர் வழியாகவோ, தொலைநோக்கி வழியாகவோ பார்க்கும் போது தடுமாறலை உணரலாம்... தடுமாற்றம் என்னவோ உங்கள் மூளைக்குத்தான். சட்டென அதனால் காட்சியை ஒரு கணக்கிற்குள் கொண்டுவர முடியவில்லை என்பதே உண்மை. பேருந்தில் பயணிக்கும்போது ஒரு செய்தித்தாளையோ, நூலையோ படிக்க முற்படுவதும் மூளைக்கு தடுமாற்றம் ஏற்படுத்தலாம்.

இப்படியான தடுமாற்றங்களை தடுத்து, நீ அப்படியே இருடாப்பா, எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்பதாகத்தான் அவதாரின், அவதார கேமரா...Fusion 3D Camera / Vince-Cameron System செயற்படுகிறது.

அடுத்ததாக...

நோயாளி இறந்து போக மருத்துவம் சக்ஸஸ் ஆன கதையாக...திரைப்படம் ஊத்திக்கொண்டாலும் காமிரா பாராட்டப்படுவது, காட்சியை கண்கள் வழியாக ஸ்மூத்தாக (!?) மூளைக்கு எடுத்துச்சென்றது தான். நண்பர் ஜாக்கிசேகர் இது பற்றி விவரிக்கக்கூடும். எந்த திரைப்படத்தில், நீங்கள் காணும்பொழுது ஒரு காமிரா வழியாக பார்க்கிறேன் என்பதை மறந்து போனால் அங்கே காமிரா வெற்றி பெறுகிறது.

உங்கள் சோதனைக்கு...

ஒரு திரைப்படத்தை காமிரா மேன்-உமன் பார்வை கோணத்திலேயே திரையரங்குகளில் காண விரும்பினால்... ஒரு சமன்பாடு செயற்படுத்திப்பாருங்கள்...
அரங்கினுள் இருக்கை = திரையின் உயரம்x3 மடங்கான தூரம்.

சில ஆக்ஷன் திரைப்படத்தை 3Dல் பார்த்தால் நல்லா இருந்திருக்குமே என்று எண்ணியிருப்பீர்கள். இப்போது அதே திரைப்படத்தை காணச்செல்லுங்கள்... குறிப்பிட்ட அந்த காட்சிகளின் போது... ஒரு கண்ணை மூடிக்கொண்டு பாருங்கள்... ஆனால் மிக நீண்ட நேரத்திற்க்கு காணக்கூடாது...

என் பரிசோதனைக்காலத்தில் நோயாளி இறந்து போக மருத்துவம் சக்ஸஸ் ஆன கதை... என் ஒரு கண் வீங்க பள்ளிக்கு விடுப்பு கொண்டதும் நிகழ்ந்தது.

குறிப்பாக ஒரே காட்சியை மிக நீண்ட நேரத்திற்க்கு காணும் போது ஒவ்வொரு கண்ணும் மாறி, மாறி ஓய்வெடுத்துக்கொள்கின்றன...

தொடரலாமா?...

Post Comment

1 comment:

பாலா said...

//////குறிப்பாக ஒரே காட்சியை மிக நீண்ட நேரத்திற்க்கு காணும் போது ஒவ்வொரு கண்ணும் மாறி, மாறி ஓய்வெடுத்துக்கொள்கின்றன...////

இந்த மேட்டர் புதுசு. :-) :-) ஆராய்ச்சி பண்ணிப் பார்த்துடுறேன்.

------

ரெண்டு விஷயம்.

1. தமிழிஷ் வோட்டு பட்டையை ஆட் பண்ணுங்க.

2, தயவு செஞ்சி இந்த கமெண்ட் மாட்ரேஷனை எடுத்து விடுங்க! :)

கமெண்ட் போடவே யோசிக்கிற பய புள்ளைக, எக்ஸ்ட்ராவா இங்லீஸ்ல எல்லாம் அடிக்க மாட்டாங்க.