சொந்த தயாரிப்பு... கண்டு களியுங்கள் ...
தலைவர் கைய பிடிச்சி வாழ்த்து சொல்லுங்கப்பா... லேட் ஆனாலும் லேட்டஸ்டா...
உடனே வேகமா கைய நீட்டிருவீங்களே...
யாருப்பா அது... ரொம்ப வழியாதீங்கப்பா... காலாலா எத்தி விட்டுற போறாங்க...
ம்ம்ம். ஏகாந்தம்... இப்படித்தான் அனுபவிக்கனும் பொழுதுகளை...
இதுவரைக்கும் 3d ல நிறைய பார்த்தோம்... இப்ப இன்னொரு 3d வகையை பார்ப்போம். அது வண்ண குருடு வகை. நம்ப கண்களுக்கே நிறக்குருடுன்னு ஒரு ப்ரோப்ளம் இருக்கு. அதாவது சில குறிப்பிட்ட வண்ணங்களை சட்டென பிரித்தாள முடியாது.
அதுனால (இவரு ரொம்ப மோசம்பா... கண்களை பத்தி பேசினா... இவரு ( இவருக்கு ) வழக்கமான கலரான்னு கேக்கிறாரு.. இதுக்குத்தான் லேடிஸ் காலேஜி பக்கம் ரொம்ப சுற்றக்கூடாது )
இது ஜெனிடிக் முலமாக வருகிற ஒரு குறைபாடுன்னு சொல்லலாம்... கண்கள், பார்வை நரம்புகள், மூளையில் இருக்ககூடிய பார்வை செல்கள் பாதிப்பு இவைகளால் வண்ண குருடு உண்டாகலாம்... இதற்கு தீர்வு உண்டா... உண்டு... கலர் கண்ணாடி... அல்லது கலர் கண்டக்ட் லென்சு... பெரிய பிரச்னை என்னன்னா இந்த குறை சட்டென உணர முடியாது...
இந்த கொடி எப்படி எல்லாம் கலராகிறது பாருங்களேன்... யாராவது கலர் கனவு கண்டதுண்டா... ச்ச ... இப்படி உடனே கைய தூக்க கூடாதுப்பா...
எல்லாருக்கும் கருப்பு வெள்ளை கனவுதான்... கலரை கனவிலே கண்டாலும் கூட... அதனாலதான் கருப்பு வெள்ளை எப்பவும் மனதோடு பேசும்...
சரி.. இந்த நிறக்குருடு 3d க்கும் ஒரு உதவி பண்ணுது. அதாவது... ஒரு முறையை உருவாக்கி தந்தது. எப்படி...?
மேலே உள்ள படத்தில் முதல் வரைவுக்கான விளக்கம்... இரு வண்ண ஒளிபுகும் கண்ணாடி. ஓன்று நீலம் கலந்த பச்சை, ஓன்று சிகப்பு... அந்த தமிழ் என்ற எழுத்துகளும் அதே வண்ணங்கள்... தமிழை கவனியுங்கள் (ஆமாப்பா...விட்டுராதீங்க) எழுத்துக்கள் முன் பின் இருப்பதை கவனியுங்கள்.. இப்போது இந்த இரு வண்ண கண்ணாடி முலமாக எழுத்தை பார்க்க... அங்கே மி மட்டும் முன்னால் வருகிறதே...
காரணம் இதுதான்... சிகப்பு வண்ணத்தால் சிகப்பை அறிய முடியாது... நீலம் கலந்த பச்சை வண்ணத்தால் நீலம் கலந்த பச்சையை அறிய முடியாது... இப்போது நாம் காண்பது... சிகப்பால் நீலம் கலந்த பச்சை... நீலம் கலந்த பச்சை வழியாக சிகப்பு... அதனால 3d...
இப்போது வரைபடம் இரண்டுக்கு வருவோம்... அது ஒரு சாதனமாக செய்ய முடியும்... இரண்டு ஒரே ஒளிப்படங்கள்... 65mm இல்லாவிட்டாலும் பரவா இல்லை. குத்துமதிப்பாக 32 கோண சாய்வு, அதற்க்கு இணையான மற்றொரு ஒளிப்படம். இப்போது நீங்கள் ரம்பா விளைவோ அல்லது வேறு விளைவோ, பாருங்கள் 3d யை காணுங்கள்...
கேள்வி இருந்தால் கேளுங்கள்...
2 comments:
///எல்லாருக்கும் கருப்பு வெள்ளை கனவுதான்... கலரை கனவிலே கண்டாலும் கூட..///
எனக்கிந்த டவுட் இருந்துகிட்டே இருக்கு. நான் கனவில் கலர் பார்க்கும்போது, இதை எப்படி B&W-ன்னு சொல்ல முடியும்???
பாலா -- கனவை மறு ஒலிபரப்பு செய்யும் போது (Recall) அவை நிழல் உருவங்களாகவே தோன்றுவதை காணலாம். B&W என்று சொல்லுவது மிகச்சரியானதல்ல என்பதே உண்மை. கனவிலும் கலர் பார்த்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி... ;-)
Post a Comment